மீஞ்சூர், ஜூலை. 23 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில். செயல் அலுவளர் வெற்றிஅரசு தலைமையில் இன்று பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையில் மீஞ்சூர் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் ஆரணி பேரூராட்சி ஊழியர்கள் கூட்டாக இணைந்து சோதனையை மேற்கொண்டனர். மீஞ்சூர் வேளாளர் தெருவில் உள்ள சிறு வியாபார நிறுவனங்களிலும், பஜார் பகுதி டி. எச் சாலையில் அமைந்துள்ள ஸ்வீட் கடையில் சோதனை செய்தனர்.
இச்சோதனையின் போது பயன்பாட்டிற்காக மறைத்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாலித்தீன் கவர்கள் வைத்திருப்பது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அந்த கடையில் மட்டும் 500 கிலோ கிடைத்தாகவும் .அதே போன்று அனைத்து கடைகளிலும் சோதனை செய்ததில் மொத்தம் 712 கிலோ பிளாஸ்டிக் பாலித்தீன் கவர்கள் பிடிபட்டதாகவும் பேரூராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன் படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை பயன் பாட்டிற்கும் விற்பனைக்கும் வைத்திருந்த கடைக்காரர்களுக்கு ரூ. 26300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் இளநிலை உதவியாளர்கள் அன்பரசு, கருப்பையா, மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள் உடன் இருந்தனர்.























