மீஞ்சூர், ஜூலை. 19 –
இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் திருத்தணி திருக்கோயிலுக்கு நடைப்பயணமாக செல்லும் 108 முருக பக்தர்களுக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கு குருசாமி ராஜ் ,கார்த்திக் ,முருகன், உள்ளிட்டோர்கள் தலைமையிலும், முத்து மாரியம்மன் கோவில் பூசாரியும், தர்மகர்த்தாவுமான வேலாயுதம் முன்னிலையில், 108 முருகப் பக்தர்களுக்கு அலகு குத்தி கிராமம் முழுவதும் வளம் வந்து நடைபயணமாக திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்றனர். நிகழ்ச்சியில் மாரி. சாந்த். நாகராஜன் .சிலம்பு. உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





















