கும்பகோணம், ஜூலை. 09 –
கும்பகோணத்தில் இன்று எல்.ஐ.சி முகவர் கோட்ட 4 வது மாநாடு நடைப்பெற்றது. அதில் எல் ஐ சி தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே நீடிக்க வேண்டும், பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்ப பெற வேண்டும், முகவர்களுக்கானக் குழு காப்பீட்டினை ரூபாய் 25 லட்சமாக உயர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்பட்டுள்ளது என எல்.ஐ.சி.முகவர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ் ஏ கலாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் இம்மாநாடு தலைவர் தங்கமணி தலைமையில் கும்பகோணத்தில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் மாநில செயல் தலைவர் பூவலிங்கம், மாநில பொதுச்செயலாளர் எஸ் ஏ கலாம், மாநில பொருளாளர் கே தாமோதரன், உள்ளிட்ட கோட்டத்திற்குட்பட்ட 27 கிளைகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட முகவர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில், எல்ஐசி நிறுவனம் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே நீடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும், முகவர்களுக்கான குழு காப்பீட்டினை ரூபாய் 25 லட்சமாக உயர்த்திட வேண்டும், பணிக்கொடையினை 5 லட்சமாக உயர்த்திட வேண்டும், முகவர்கள் அனைவருக்கும் மருத்துவக்காப்பீடு அட்டை வழங்கிட வேண்டும், பாலிசி பத்திரத்தை தமிழகத்தில் உள்ள 8 கோட்டங்களிலும் தமிழிலேயே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பேட்டி : எஸ் ஏ கலாம், மாநில பொதுச்செயலாளர், எல்ஐசி முகவர்கள் சங்கம்