பொன்னேரி, ஜூலை. 08 –

பழவேற்காட்டில் மீன் பிடி துறைமுகம் அமைக்க பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைப்பெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் 16 மீனவர் கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் ஆண்டார் மடம் புயல் பாதுகாப்பு மையம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரங்கம் குப்பத்திற்கும் வைரவன்குப்பத்துக்கும் இடையே மீன்பிடித் துறைமுகம் அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், பழவேற்காடு ஏரிக்கும் கடலுக்கும் 500 மீட்டர் இடைவெளியில் உள்ள நிலையில் தேர்வு செய்த இடத்தை மாற்றி மறு ஆய்வு செய்து கூனங்குப்பம் கிராமத்திற்கு வடக்கு பக்கமாக  மீன்பிடித் துறைமுக அமைக்க பெரும்பான்மையான மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம்  பேசிய பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், மீனவர்களின் கருத்துக்களை கேட்டுள்ளதாகவும், அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், அரசு இறுதி முடிவு எடுக்கும் என தெரவித்தார். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here