மீஞ்சூர், ஜூலை. 07 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு ஊராட்சியில் தமிழக அரசின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் காய்கறி உணவு வகைகளை பயிரிடுவதர்கான கிராமப் பெண்களுக்கு விதைகள் வழங்கும் நிகழ்ச்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம் டி ஜி கதிர்வேல் தலைமை வகித்து 41 பயனாளிகளுக்கு விதைகளும். மண்புழு உரம் ஐந்து கிலோ எடை கொண்ட பையினை வழங்கினார். அவருடன் வார்டு உறுப்பினர் கோமதிநாயகம். ஊராட்சி செயலர் பொற்கொடி உள்ளிட்ட திரளாத கிராம பெண்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.
























