ஆவடி, ஜூன். 30 –
ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜயா முனிய நாதன் என்பவர் தன்னுடைய கைரேகையும் தனதுடைய சகோதரி சாந்தா என்பவரின் கைரேகையும், போலியான நபர்களைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து தங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் 79 சென்ட் நிலத்தை பத்திரப்பதிவு தயாரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆவடி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கர்லப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விஜயா முனி நாதன் யாதவ தெரு வேப்பம்பட்டு கிராமத்தில் அவர்களுடைய தாத்தா வெங்கட்டய்யா நாயுடு 3 ஏக்கர் 79 சென்ட் நிலம் கிரையம் வாங்கி அவர் காலத்திற்குப் பிறகு தமது தந்தை குப்புசாமியும், அவரின் காலத்திற்கு பின் அவரது தம்பி டில்லி, சகோதரி சாந்தா, தம்பி சேகர் ஆகியோர் அனுபவித்து வந்ததாகவும் இந்நிலையில் அந்நிலத்தில் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ராஜு என்பவர் லே-அவுட் அமைக்க சுத்தம் செய்ய வந்துள்ளார்.
அப்பொழுது அவர்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் ஏன் சுத்தம் செய்கிறேர்கள் எனக் கேட்டதாகவும், அதற்கு அவர் நாங்களே அவருக்கு ஏற்கனவே விற்று விட்டதாக தெரிவித்ததாகவும். அம்மனுவில் விஜயா தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் நிலத்தின் வில்லங்கம் சான்று போட்டுப் பார்த்த போது வில்லங்கத்தில் நானும் எங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் விற்றதாக எந்த ஒரு வில்லங்க பதிவும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அதற்கு அவர் சென்னை பெரம்பூர் ஸ்ரீவாளர் ரோட்டில் வசிக்கும் அருட் செல்வம் என்பவருக்கு நாங்கள் விற்று விட்டதாகக் கூறி ஒரு போலி கிரையம் பத்திரத்தை காண்பித்தார். அந்த கிரைய பத்திரத்தில் நானும் என் தம்பிகள் சகோதரிகள் கையொப்பமிட்டு கிரையம் செய்து கொடுத்ததாக கிரைய பத்திரம் காட்டினார்கள்.
உடனடியாக வழக்கறிஞர் உதவியுடன் திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆய்வு செய்த போது கைரேகை பதிவேட்டில் நகலை பெற்று அதில் இடப்பட்டுள்ள கைரேகை தங்களுடையது இல்லை ஆள்மாறாட்டம் செய்து பதிவு செய்யப்பட்டது என தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களது நிலத்தை மீட்டு தரக் கோரியும் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரியும் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.




















