சென்னை, ஜூன். 19 –

தமிழகத்தில் கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் அதன் 24 வது ஆண்டு விழாவினை கொண்டாடவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவ்விழாவில் பங்கேற்க தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்துறை அரசு உயர் அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அவ் யூனியனின் நிறுவனரும் மாநிலத்தலைவருமான டாக்டர் எம். சிவதமிழவன் நேரில் சென்று விழா அழைப்பிதழை வழங்கி விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கும் படி அழைப்பு விடுத்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக இன்று 19.06.22 காலை தமிழக மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம. சுப்ரமணியத்தை அவரது இல்லத்தில், தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்ஸ் யூனியன் நிறுவனர் & மாநில தலைவர் Dr.M.சிவதமிழவன். துணை தலைவர் Dr.R.சிவரமான், பொதுசெயலாளர் CP இராஜன், தலைமை நிர்வாக இயக்குநர் லயன் M பெருமாள், அமைப்பு செயலார் Dr.முருகன். துணை செயலாளர் R.ராஜி, பிரஸ் கார்த்திக், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நாஞ்சில் M முருகன் ஆகியோர் சந்தித்து 24-வது மாநில மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து விழாவினை சிறப்பிக்க அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்கள்.

விழா அழைப்பிதழை பெற்றுக்கொண்ட அமைச்சர் விழாவிற்கு வருகை தருவதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து டாக்டர் எம். சிவதமிழவன் யூனியன் சார்பில் தமது நன்றியினை அமைச்சருக்கு தெரிவித்துக்கொண்டார். என தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here