மீஞ்சூர், ஜூன். 17 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கியது வன்னிப் பாக்கம் ஊராட்சி, இவ்வூராட்சியில் மேட்டுப்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 3 கோடி மதிப்பிலான நிலத்தினை தனியார்கள் சிலர் ஆக்கிரமித்து அதில் கட்டடங்களை எழுப்பி பல்வேறு தொழில் சம்பந்தப்பட்ட வியாபாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்நிலத்தை மீட்பதற்காக ஊராட்சியின் சார்பில் இரண்டு வருட காலமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு.வந்த நிலையில், அத்தீர்மானத்தை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு ஊராட்சியின் சார்பில் கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து. அந்நிலத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் வருவாய் துறைக்கு உத்தரவுயிட்டார்.
அதன் பேரில் வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம்., வட்டார வளர்ச்சி அலுவலர் நர்மதா,. ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம், .மீஞ்சூர் காவல் நிலைய போலீசார், மற்றும் .கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன். உள்ளிட்டோர் இன்று தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து அரசுக்கு சொந்தமான நிலைத்தை மீட்க ஜேசிபி இயந்திரத்தின் துணையோடு ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டனர்.
அப்போது ஆக்கிரமிப்பு இடத்தில் டீ கடை, பூக்கடை என அமைத்து வியாபாரம் செய்து வந்த பொதுமக்கள் வழக்கறிஞரின் துணையோடு நாங்களே காலி செய்து விடுகிறோம் என்றும் அதிகாரிகளின் முன்னிலையில் 10 நாள் அவகாசம் கேட்டனர். அதனைத் தொடர்ந்து கால அவகாசம் கொடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பத்து நாட்கள் அவகாசம் கொடுத்து அரசு அலுவலர்கள் திரும்பி சென்றனர்.



















