காஞ்சிபுரம், ஜூன்.16 –
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் தொழில் முனைவோருக்கான பல்வேறு சேவைகளை வழங்கும் வகையில் மகளிர் வாழ்வாதார சேவை மையம் நேற்று தொடங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தார். தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதிச்சேவைகளுக்கு வழிவகுத்தல் என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்த படுகின்றது.
மேலும், இத்திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டங்களில் 101 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகின்றதாக தெரிவித்தனர்
























