திருவள்ளூர், ஜூன். 11 –

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், விச்சூர் ஊராட்சி பொதுமக்களுக்கு ஐந்து விதமான நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில், குடிதண்ணீர் வினியோகம் செய்யும் டிராக்டர், .குளிர்சாதன பெட்டி, அமரர் ஊர்தி, கழிவுநீர் வாகனம், மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ள கிராம மக்கள் இலவச உணவு அருந்தும் அக்கா உணவகம் உள்ளிட்ட நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த உரிமையாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன மேலும் அக்கா உணவகத்தை ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பெரியோர்கள் ஏழை எளியவர்களின் பசித்தீர்க்க தினமும் இந்த உணவகத்தில் இலவச உணவு அளிக்கப்படும் என தெரிவித்தார். திறப்பு விழாவின் முதல் நாளான இன்று ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தானே பொதுமக்களுக்கு உணவுகளை பரிமாறி இலவச உணவகத்தை துவக்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கிராம பொது பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here