பொன்னேரி, ஜூன். 08 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

பொன்னேரியில் உள்ள ஜெயகோபால் கரோடியா மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மீஞ்சூர் வட்டார வள மையத்துக்கு உட்பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்ச்சி முகாமில் 160 ஆசிரியர்களுக்கு 4 தனித்தனி அறைகளில் ஐந்து நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியானது மாநில அளவிலான பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் மூலமாக நடைபெற்றுவருகிறது.

இப்பயிற்சியில் சிறப்பம்சமாக ஆடல் பாடல் கதைகூறல் மூலமாக மாணவர்களுக்கு வகுப்பறைச் சூழலில் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தி கற்றலை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்று ஆசிரியர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டு வருகிறது. மேலும், இப்பயிற்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ம.மோகனா மற்றும் மேற்பார்வையாளர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here