கும்பகோணம், ஜூன். 02 –

கும்பகோணத்தில் சோழநாட்டு பட்டாள படை வீரரின் பணி நிறைவு பாராட்டு விழா டெல்டா மாவட்டம் முன்னாள் இந்நாள் முப்படை வீரர்கள் மற்றும் துணை ராணுவப்படை வீரர்கள் சார்பில் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய ராணுவத்தில் 26 ஆண்டுகள் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பும் பட்டாள வீரர் குணசேகர்க்கு முன்னாள் ராணுவ வீரர் மாசிலாமணி தலைமையில் மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வரவேற்பு கொடுத்தனர்.

மேலும், கொற்கை துறையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணப் பொருட்களான நோட்டு, பேனா, மற்றும் பேக் உள்ளிட்ட நல உதவிகளை பணி நிறைவு பெற்ற ராணுவ வீரர் குணசேகரன் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் மாசிலாமணி ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை, அரியலூர், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்னாள் இன்னாள் முப்படை வீரர்கள் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கொற்கை துறையூர் ஊராட்சியைச் சேர்ந்த கிராமமக்கள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சோழ நாட்டுப் பட்டாள வீரர் குணசேகருக்கு வரவேற்பு அளித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here