திருவேற்காடு, ஜூன். 01 –
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட சுந்தர சோழவரம் ராம்நகரில் உள்ள பகுதியில் இன்று புதிதாக சென்னை ஃபிரஷ் சூப்பர் மார்க்கெட்டின் திறப்பு விழா நடைப்பெற்றது.
சென்னை ஃபிரஷ் சூப்பர்மார்க்கெட் கடையின் உரிமையாளர் முருகன் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் திருவேற்காடு நகரமன்ற தலைவர் என் இ கே மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
தொடர்ந்து கடையின் உள் கட்டமைப்பு மற்றும் வரிசைப்படுத்தி வைத்திருந்த பொருட்கள் அனைத்தையும் பார்வையிட்டு அதன் தரம் குறித்து உரிமையாளர் முருகனிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளருக்கு பொருளை வழங்கி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
முன்னதாக திருவேற்காடு நகரமன்றத் தலைவருக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் பரிசு முத்து கிளை செயலாளர்கள் திமுக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.






















