கும்பகோணம், மே. 22 –
சென்னையிலிருந்து சாமி தரிசனம் செய்வதற்காக சொகுசு காரில் கும்பகோணம் வந்த ஐடி கம்பெனியில் பணிப்புரியும் நபரின் கவனத்தை திசைத் திருப்பி அவர் காரில் ரூ. 25 ஆயிரம் உட்பட ஏடிஎம் கார்டு வைத்திருந்த பேக்கை ஐந்துப்பேர் கொண்ட கும்பல் ஒன்று திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
கும்பகோணத்தில் சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரை சேர்ந்த சரத் என்பவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் அவர் தனது குடும்பத்தினருடன் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக கும்பகோணம் வந்துவர் உச்சி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள சாரங்கபாணி சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கீழவீதியில் காரை நிறுத்த முற்படும் போது அங்கு வந்த ஒரு நபர் நீங்கள் வாகனத்தில் மோதி விட்டு வந்ததாக கூறுகிறார் .
அவர் காரை விட்டு இறங்கி தனது வாகனத்தின் மீது மோதிய தடயம் ஏதாவது உள்ளதா என்று பார்ப்பதற்குள் அந்த மர்ம நபருடன் வந்த மற்றொருவர் சரத்தின் காரில் இருந்த கைப்பையை திருடிச் சென்று விடுகிறார் . மீண்டும் காரை எடுத்து ஓரமாக நிறுத்த முற்படும் போது அவரது காரில் இருந்த பை காணாமல் போனது தெரிய வருகிறது.
அப்பையில் ரூ. 25,000 பணம் ஏடிஎம் கார்டு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இருந்ததாக தெரியவருகிறது. இதுத் தொடர்பாக தகவலயறிந்து அங்கு வந்த கிழக்கு காவல்துறை ஆய்வாளர் அழகேசன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு பார்த்த போது இதில் 5 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.
இது குறித்து கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர். மக்கள் அதிகமாக நடமாட்டம் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




















