மீஞ்சூர், மே. 21 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு பகுதியில் இயங்கி வருகிறது ஜே.எஸ்.டபிள்யூ என்ற நிலக்கரி ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் அந்நிறுவனத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உதவி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிர்வாகத் தரப்பில் அவமதிப்பு இன்றி நடத்த வேண்டும், தொழிற்சாலையில் பணிபுரியும் காலகட்டத்தில் உயிரிழந்த சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த மணிகண்டன். திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் சிஐடியு தொழிற்சங்கத்தின் தலைமையில் இன்று ஜே.எஸ்.டபிள்யூ நிலக்கரி ஏற்றுமதி நிறுவனத்தின் நுழைவுவாயில் முன்பு சி.ஐ.டி.யு. மாநில துணைத் தலைவர் கே விஜயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி மாவட்ட இணை செயலாளர் நரேஷ் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிஐடியு தொழிலாளர் சங்கத்தினர் பங்குபெற்று நடத்தினர்.




















