காஞ்சிபுரம், மே. 21 –

குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கவும் காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியில் புறகாவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது அதனை இன்று வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் (ஐஜி) பிரேம் ஆனந்த் சின்கா திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கவும் காவல் துறையினரின் பணிச் சுமையை குறைக்கும் பொருட்டும், பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 10 மாத காலத்தில் முக்கிய இடங்களில் அதி நவீன தொழில் நுட்பத்துடன் 1383 கண்காணிப்பு கேமராக்கள் உட்பட 4,584 சிசிடிவி கேமராக்கள் ஒருத்தியும் பல்வேறு இடங்களில் புறக்காவல் நிலையங்களை திறந்து வைத்தும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சி சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்லவர் மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டும் அந்த பகுதியில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கவும் பல்லவர் மேடு பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

பல்லவர் மேடு பகுதியில் 51 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் காவலர்கள் பணியில் இருக்கும் வகையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

பல்லவர் மேடு புறக் காவல் நிலையத்தை காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யப்ரியா முன்னிலையில், வடக்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

 

பின்னர் பேசிய வடக்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா,

வடக்கு மண்டல காவல்துறை கட்டு பாட்டில் உள்ள  பகுதிகளில் பிற மாவட்டங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் முன் உதாரணமாக உள்ளது.

சிறிய மாவட்டமானாலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 5000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் புறக்காவல் நிலையங்கள் அமைப்பதிலும் சிறிய இடமானாலும் 51 சிசிடிவி கேமராக்கள் அமைத்துள்ளது.

வருங்காலத்தில் குற்றங்களைத் தடுப்பதில் முன்னோடியாக விளங்கும் சிசிடிவி கேமராகளை வைப்பதில் பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை அளித்திட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தங்கள் வீடுகளிலும் பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் என கேட்டு வேண்டுகோள் விடுத்தார்.

புறக்காவல் நிலையம் திறப்பு விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி. சுதாகர், ஏடி.எஸ்பி வினோத் சாந்தாராம், காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியஸ் சீசர், இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், வெங்கடேசன், நிவாசன், மாநகராட்சி கவுன்சிலர் மௌலி சசிகுமார், காவல்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here