மீஞ்சூர், மே. 20 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பள்ளியில் உயர் கோபுர மின் விளக்கு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காட்டுப்பள்ளி அதானி அறக்கட்டளை சமூக வளர்ச்சி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்பட்ட இதில் காட்டுப்பள்ளி கிராமத்தில் உயர் கோபுர மின் விளக்கினையும், காட்டுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட காளாஞ்சி, செப்பாக்கம், காட்டுப்பள்ளி குப்பம், காட்டுப்பள்ளி கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களையும் காட்டுப்பள்ளி ஊராட்சிமன்ற தலைவர் சேதுராமன் ஏற்பாட்டில் மீஞ்சூர் ஒன்றியக் குழுப் பெருந்தலைவர் ஜி.ரவி மின் விளக்கை ஒளிரச் செய்து விளையாட்டு உபகரணங்களை இளைஞர்களுக்கு வழங்கினார்.
அவருடன் அதானி அறக்கட்டளை திட்ட மேலாளர் ஜேசுராஜ்,காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற துணை தலைவர் வினோதினி வினோத்,வார்டு உறுப்பினர் வான்மதி ராஜி, ரஞ்சித்,சுரேஷ்,டில்லி பாபு,எல்லமுத்து மற்றும் கிராம மக்கள் அருகில் இருந்தனர்.






















