காஞ்சிபுரம், மே. 20 –

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து  ஏற்பட்டது  நேற்றிரவு இரவு 7 மணி முதல் வரை மூன்று மணி நேரத்திற்க்கும் மேலாக எரிந்தது.  அதனை அணைக்க தொழிற்சாலையில் மூன்று தீயனைப்பு வாகனங்கள் மூலம்  50 – க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.

பிரபல கார் தயாரிக்கும் கம்பெனியான Hyundai, Nisan கம்பெனிக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒரகடத்தில் இயங்கி வருகிறது. அத் தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியிது இதனிடையே மூன்று தீயணைப்பு வாகனத்தில் வந்த 50 க்கும் மேற்பட்ட வீர ர்கள் தீயணைக்கும் பணியில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போரிட்டு தீயினை அணைத்தனர்.இவ்விபத்திற்கான காரணம் மின்கசிவால் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் தொடர் விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விபத்தில் பொருள் சேதங்கள் குறித்து முழுமையான விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here