கும்பகோணம், மே. 16 –
கும்பகோணம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு பயிலும் தா.பழுவூரை சேர்ந்த மாணவி கார்த்திகா (20) கும்பகோணம் பேருந்துநிலையம் அருகே நகரும் பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்ததில் பேருந்து சக்கரம் ஏறியதில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி ஞிகிச்சையளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவ்விபத்துக் குறித்து போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.