காஞ்சிபுரம், மே. 13 –
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை என பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நன்னடத்தை பிணையை மீறிய காஞ்சிபுரம் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான பரத் (27), என்பவரை 72 நாட்கள் சிறையில் அடைக்கவும், கோபி (33) என்பவரை 69 நாட்களும், ஹரிபாபுவை 220 நாட்கள் சிறையில் அடைக்கவும் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாச்சியர் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய சிவ காஞ்சி காவல் ஆய்வாளர் வினாயகத்திற்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.



















