திருவாரூர், மே. 13 –

திருவாரூர் மாவட்டம் நன்னிலம்  அருகே  கமுதக்குடி கிராமத்தில் மேற்பார்வையாளர் (oversear) பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில்  வீடுகட்டுவதற்கு லஞ்சம் கேட்டதால் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிகழ்வினை கேள்விப்பட்டவுடன்  நேற்று இரவு 10 மணி அளவில் மணிகண்டன் அவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று பாஜக தொண்டர்களுடன் மாநிலத் தலைவர் அண்ணாமலை குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.  உடனடியாக மணிகண்டனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடும் , குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என அங்கு தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here