கும்பகோணம், மே. 07 –
கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவன் கடந்த 2ம் தேதி பேருந்தில் பயணம் செய்த போது விபத்தில் உயிரிழந்தார். அவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணத்தில் அரசு கலைக் கல்லூரியில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையத்தைச் சேர்ந்த மங்கலம் மாணவன் சதீஷ்குமார் அரசினர் கலைக் கல்லூரியில் பிஏ சுற்றுலா துறை படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி பேருந்தில் படியில் நின்றவாறு பயணம் செய்த போது பேருந்து நிலையம் அருகே 60 அடி சாலையில் பஸ் திரும்பும் பொழுது சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தில் விளம்பரப்பலகை மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தமிழக அரசு உயிரிழந்த சதீஷ்குமார் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவில்லை இது சம்பந்தமாக அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மேலாளர் கோட்டாட்சியர் காவல்துறை அதிகாரிகள் யாரும் மாணவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த அழைத்திருந்தோம் ஆனால் யாரும் வரவில்லை, உயிரிழந்த சதீஷ்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை உடனே நிவாரணம் வழங்கக்கோரியும், பள்ளி கல்லூரி நேரங்களில் அதிக பேருந்துகள் இயக்க கோரியும் இந்திய வாலிபர் சங்கம் சார்பில் அரசு கலைக் கல்லூரி முன்பு மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.




















