கும்பகோணம், மே. 04 –
கும்பகோணம் அருகே மருதாநல்லூரில், சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட சுமார் 10 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார். இவ்விபத்துக்குக் குறித்து காவல்துறை விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே மன்னார்குடி சாலை விரிவாக்கப்பணியின் ஒருபகுதியாக, வாய்க்கால் பாலத்திற்காக தோண்டப்பட்ட சுமார் 10 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் வாகனத்துடன் தவறி விழுந்து உயிரிழத்தார்.
செட்டிமண்டபம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (55) இவர் இன்று அவ்வழியாக சாலையைக் கட்க்க முற்றபட்ட போது சாலை விரிவாக்கப்பணியின் ஒரு பகுதியாக வாய்காலுக்காக தோண்டப்பட்ட 10 அடி ஆழமுள்ள குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.இவ்விபத்துக் குறித்து நாச்சியார்கோயில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதுப்போன்றே கடந்த மாதம் 5ம் தேதி அப்பகுதியில் நடந்து சென்ற போது சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் அடையாளம் தெரியாமல் ஆடுதுறையைச் சேர்ந்த செல்வராஜ் (60) என்பவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது . சாலை விரிவாக்கப்பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததார்கள், ரிஃப்ளெக்டர் ஸ்டிக்கர் மற்றும் சாலை பணிக்குறித்த அறிவிப்பு பலகை, பேரிக்கார்டு போன்ற சரியான முன்னச்சரிக்கை மற்றும் தடுப்பு அமைப்புகள் இல்லாமல் அலட்சியமாக பணி மேற்கொள்வதே இத்தகைய விபத்துகள் ஏற்படவும், உயிர்பலிகள் தொடரவும் காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.