கும்பகோணம், ஏப். 30 –

கும்பகோணத்தில் காமராஜர் சாலையில் உள்ள கட்டடத்தில் இன்று மாலை, 2வது மாடியில் புனரமைப்பு பணி நடைப்பெற்று வந்தது. அப்பணியில்  ஈடுபட்ட கட்டட தொழிலாளர்கள் மீது அவ்வீட்டின் கட்டிட முகப்பு கூறை திடீரென இடிந்து விழுந்ததில் கட்டிட இடிபாடுகளில் ஜாகிர்உசேன் (54), கார்த்தி (50) ஆகிய இரு தொழிலாளர்கள் அதில் சிக்கினர். அதில் ஜாகீர் என்பவர் சிறுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றொருவரான கார்த்தி நீண்ட போராட்டத்திற்கு பின்பு உயிரிழந்த நிலையில் அவரின் உடல் மீட்கப்பட்டது.

கும்பகோணத்தில் காமராஜர் சாலையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கருணாகரன், கல்வித்துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்ற, பிலோமினா தம்பதியினருக்கு சொந்தமான வீடு உள்ளது. இதில் 2வது மாடி கட்டிடத்தில் புனரமைப்பு பணிகளை திருவாவடுதுறையை சேர்ந்த கார்த்தி, ஜாகிர்உசேன், சந்திரமோகன் மற்றும் சுரேஷ் ஆகிய நால்வர் கடந்த ஒருவார காலமாக அக் கட்டட சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை சுமார் 4.30 மணியளவில், 2வது மாடியில் இருந்து சன்சேடூ திடீரென இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் கார்த்தி மற்றும் ஜாகிர் உசேன் ஆகிய இருவர் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சேகர் தலைமையில் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர், 108 ஆம்புலன்ஸ் மற்றும் கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன், மேற்கு காவல் ஆய்வாளர் பேபி மற்றும் ஏராளமான காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதில் கட்டிட இடிபாடுகளை கட்டர்கள் கொண்டு வெட்டியும், ஜாக்கிகளை சிறிதளவு தூக்கியும், முதலில் லேசான காயங்களுடன் ஜாகிர்உசேனை மீட்டனர், தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் மீட்டுப்புப் பணியில் ஈடுபட்ட பின்னர் கார்த்தி உயிரற்ற உடலாக மீட்கப்பட்டார். கட்டிட இடிப்பாடுகளில் இருவர் சிக்கிக் கொண்டதும் அதில் ஒருவர் பலியானதும், இன்று  மாநகரில் பெரும் அதிர்ச்சியினையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் விரைந்து வந்து விபத்து குறித்து கேட்டிருந்தார் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜாகிர் உசேனையும் உயிரிழந்த கார்த்திக் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

 

பேட்டி : சேகர், நிலைய அலுவலர், கும்பகோணம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here