மீஞ்சூர், ஏப். 27 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்தள்ளது குமரசிறுளப்பாக்கம் கிராமம். இங்கு மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பபள்ளி பழுதடைந்த கட்டடத்தில் நடைபெற்று வந்தது. அதனை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு  இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக  அரசு அதிகாரிகளின்  உத்தரவிட்டு இடிக்கப்பட்டது.

இடித்து ஆறுமாதத்திற்கு மேலாகியும் அவ்விடத்தில் புதிய பள்ளிக்கட்டம் கட்டுவதற்கான ஆரம்ப நிலை வேலைகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை . மேலும், பள்ளிக்கட்டடம் இடிக்கப்படுவதற்கு முன்னர் பள்ளி தொடர்ந்து இயங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக வாடகை கட்டடம் கிடையாது.

இதனால் அக்கிராம பள்ளி முகவரியற்ற அவல நிலையில் மரத்தடி நிழலிலும், கிராம கோயிலிலும் அப்பள்ளிக் குழந்தைகள் கல்விப் பயின்று வரும் பரிதாப நிலை உள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி பழுதடைந்த கட்டடம் அரசு நடவடிக்கையால் இடிக்கப்பட்டச் செயல் பாராட்டுக்குரியது. அதே வேளையில் அவர்களுக்கு தற்போதும் பாதுகாப்பற்ற சூழல்தான் நிலவி வருகிறது. குறிப்பாக பாதுகப்பற்ற திறந்த வெளி மேலும் விசப்பூச்சிகள் நடமாட்டம், குடிநீர் மற்றும் உடல் உபாதைகளுக்கான அடிப்படை வசதிகள்,  திடீரென மழை பெய்தால் குழந்தைகளின் பாதுகாப்புக் குறித்த கேள்விகள் என தொடர் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த அடிப்படை தேவைகளில் பள்ளிக் குழந்தைகளுடன் தினம் தினம் ஆசிரியர்களின் அவஸ்த்தையை சொல்லி மாளாது. என அக்கிராம கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் என அனைத்து தரப்புபினரும், வேதனைகளோடு பல்வேறு கேள்விகளை தொடர்ந்து எழுப்புகின்றனர். மேலும் இதுப்பற்றி உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளிடம் புகார் தெரிவித்தால் ஆளுக்கொரு ஆளைக் கையைக் காட்டி மொத்தத்தில் மாவட்ட நிர்வாகம் எனத் தொடர்ந்து அரசின் தலையில் முடிகிறது.

தற்போதைய ஆண்டில் அரசுத் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வரலாற்று சிறப்பு மிக்க வகையில் கல்விக்கென முதல்முறையாக ரூ. 36895.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கல்விக்கான அடிப்படைக் கட்டமைப்பு பணிகளில் ஏனிந்த அலட்சியப்போக்கு என தெரியவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இந் நிதியானது கல்வித்துறைக்காக அரசு ஒதுக்கிய நிதி என்றாலும் பாராளுமன்ற உறுப்பினர் நிதி, சட்டமன்ற உறுப்பினர் நிதி, மற்றும் அம்மாவட்டத்தில் இயங்கி வரும் பெரும் தனியார் தொழிற்சாலை நிறுவனங்களின் சமுதாய மேம்பாட்டு நிதியென இத்தனை வாய்ப்புகள் இருந்தும் அதற்கான முயற்சிகளை எடுத்து ஏன் இப்பணிகள் செயல்படுத்த  ஏனிந்த காலதாமதம் என்கின்றனர். மாற்று ஏற்பாட்டில் கூட வாடகை கட்டடம் இல்லை என்பது வெட்கி தலைக்குனியக்கூடிய செயலாகவே நாங்கள் கருதுகிறோம் என்கின்றனர்.

இதுப்போன்று இந்த ஒன்றியத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளின் நிலமை இப்படித்தான் உள்ளதெனவும், மாவட்டம், மாநிலம், எனத்தொடர்ந்தால் இதன் எண்ணிக்கை எதில் முடியும் எனத்தெரியவில்லை

ஆதலால் இப்பிரச்சினையில் உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர், மாவட்ட, பள்ளிக்கல்வித்துறை, மற்றும் தமிழக அரசு நிர்வாகமும் இதில் தனிக்கவனம் செலுத்தி இதுப்போன்ற அவல மற்றும் அபாய சூழலில் இருந்து பள்ளிக்குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாத்தும் ஆரோக்கியமான அறிவுச்சார்ந்த கல்வி குழந்தைகளுகளுக்கு கிடைக்க உறுதி செய்திடுமாறு அவர்கள் வலியுறுத்திறார்கள் …

மேலும், அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற கோட்பாடு, சிந்தனை செயல்பாடுகளில் ஆட்சி நடத்திவரும் முதல்வர் இப்பிரச்சினையை முதன்மை பணியாக எடுத்துச் செய்வார் என அக்கிராமத்து மக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் …

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here