மீஞ்சூர், ஏப். 24 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் எதிர்வரயிருக்கும் அரசு பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 100% வெற்றி பெற வேண்டி என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்காக தன்னம்பிக்கை பற்றிய உரையை நிகழ்த்துவதற்காக வி. நந்தகுமார ஐஆர்எஸ் ஆணையர் வருமான வரித்துறை .மாணவர்களுக்கு எப்படி தேர்வில் 100% மதிப்பெண் எடுப்பது என்பது குறித்து தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக மாணவர்களிடத்தில் கலந்துரையாடினர்.
மேலும் இக்கலந்துரையாடல் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக இருந்தாலும், மாணவர்கள் தாங்கள் இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு படிப்பில் கவனக் குறைவு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் நம்மால் என்ன முடியும் என்று நினைக்காமல் என்னால் முடியும் என்று நினைத்து நீங்கள் தேர்வுக்கு பயிற்ச்சிப் பெற்றால் உங்களால் எளிதில் தேர்வில் வெற்றி பெற முடியும். என்று கூறி அவர் நிகழ்த்திய உரையை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு கேட்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சி மீஞ்சூர் அருகாமையில் உள்ள சுமார் 12 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் மாணவ மாணவியர் கலந்துகொண்டு இங்கு வந்த முக்கிய பிரமுகர்களின் அறிவுரைகளை ஆர்வத்துடன் கேட்டு சென்றனர். நிகழ்ச்சியை மீஞ்சூர் ஒன்றிய பெரும் தலைவர் ரவி முன்னிலை வகித்து தொடங்கிவைத்தார். மேலும் வல்லூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் தாளாளர் ஆர்எம் ஜானகிராமன் உள்ளிட்ட திரளான பள்ளிகளின் உரிமையாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ராமமூர்த்தி நன்றி தெரிவித்தார்























