சென்னை, ஏப். 21 –

சென்னை அடுத்த கோவூரில் பாரதிய ஜனதா கட்சியின்  தென்சென்னை மாவட்ட செயலாளர் லலிதா மகள் கிருத்திகா -ராகேஷ் திருமணம் இன்று  தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக திருமண விழாவில் பங்கேற்ற பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு, அண்ணாமலை உருவம் பொறித்த ஜாடியில் மஞ்சதூள் நிரப்பிய சீலிடப்பட்ட ஜாடியை திருமண பரிசாக மணமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து மங்களகரமாக வாழ்க என வாழ்த்தினார்.

முன்னதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு, தொண்டர்கள் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் ,தொண்டர்கள் மகளிர் அணியினர் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here