கும்பகோணம், ஏப். 18 –
கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டியின் காலை முதலை கவ்வியிழுத்ததால் அலறி அடித்துக் கொண்டு முதலையிடமிருந்து உயிர் தப்பி கரையேறினார்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அடுத்த உள்ள அணைக்கரை மணகுண்ணம் கிராமத்தைச் சேர்ந்த பானுமதி வயது 62 என்பவர் நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார்.
மேலும், தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது அவரது காலை முதலை ஒன்று கவ்வி இழுத்ததுள்ளது. அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு மதலையிடம் இருந்து காலை இழுத்துக் கொண்டு மூதாட்டி பானுமதி கரையேறியுள்ளார். அப்போது அவர் காலைப் பார்த்த மூதாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார். முதலைக் கடித்ததில் அவரது கால் படு காயங்களுடன் பெருத்த சேதமடைந்துள்ளது. உடன் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர்.
மேலும் கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடனே உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் குறிப்பிடுகையிலே சற்று தாமத்திருந்தால் அம்மூதாட்டியின் கால்கள் போயிருக்க வாய்ப்புள்ளது. இல்லையேல் உயிர் கூட இழந்திருக்க நேரிட்டிருக்கலாம் என தெரிவித்தார்கள்.
மேலும் இதுப்போன்ற சம்பவங்கள் அடிக்கடி இந்த பகுதியில் நடந்து வருகிறது எனவும் மேலும் இது குறித்து மாவட்ட நிருவாகம் மற்றும் வன பாதுகாப்பு அலுவலர்கள் தகுந்த உடனடி நடவடிக்கை மேற் கொண்டு இது போன்ற சம்பவங்கள் நடைப்பெறாமல் தடுத்திட வேண்டும் எனவும் தற்போது உடனடி மற்றும் முதற் கட்ட நடவடிக்கையாக இந்த பகுதியில் உள்ள முதலை இருப்பிடங்களை கண்டறிந்து அபாய அறிக்கை பலகை வைத்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.