கும்பகோணம், ஏப். 15 –

கும்பகோணம் அருகாமையிலுள்ள பிரசித்தி பெற்ற திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் ஆலயத்தின் சித்திரை பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் அரசு தலைமை கொறடா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

கும்பகோணம் அருகில் உள்ள  திருப்பனந்தாளில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி உடனாய அருணஜடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பழமையான புராண சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா அதி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுப்போன்று இவ்வாண்டும் இவ்விழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பெருவிழா தொடங்கியது.

விழா நாட்களில் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதிவுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான ஒன்பதாம் நாள் விழாவான இன்று பஞ்சமூர்த்திகள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பிரம்மாண்ட தேரில் எழுந்தருளினர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது, தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் அரசு தலைமை கொறடா கோவி செழியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க  நான்கு முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி.. அசைந்தாடி வந்த தேரழகினை வர்ணிக்க சொல்லுக்குள் சுருக்கிட முடியாது, விழிப்பார்வையில் அடக்கிட முடியாது மொழிக்கு அப்பாற்பட்டு உணர்வுக்குள் ஒளிந்திருக்கும் அந்த பேரழகை என்வென்று சொல்ல ! வடம் பிடித்து இழுத்தோர் வசம் அத்தனையும் அடங்கிப்போனது. வான்முட்ட யெழுந்த அவர்களின் குரலுக்குள் ..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here