கும்பகோணம், ஏப். 14 –
கும்பகோணத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அரசு போக்குவரத்து கழகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது
சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் தமிழகம் முழுவதும் அம்பேத்கரின் 131 ஆவது பிறந்தநாள் அரசு சார்பில் சமத்துவ விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு போக்குவது கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அம்பேத்கர் தொழிற்சங்கத்தில் கூட்டமைப்பு மாநில பேரவை பொதுச் செயலாளர் அண்ணாதுரை மண்டல பொதுச் செயலாளர்கள் மதியழகன் கௌதமன் ரமேஷ்குமார் ரமேஷ் அம்பேத் ஆறுமுகம் ரவி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி மண்டலச் செயலாளர் விவேகானந்தன் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் தமிழனி தொகுதி செயலாளர் முல்லைவளவன் நகர செயலாளர் கலையரசன் ஒன்றிய செயலாளர் விடுதலை செல்வன் நகர பொருளாளர் ரவிமன்னன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அரசு போக்குவரத்துக்கழக வாயில் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.





















