பொன்னேரி, ஏப். 13 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள மாதவரம் ஊராட்சிக்குட்பட்ட முஸ்லிம் நகரில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு  சென்னை முகப்பேர் பகுதியில் இயங்கி வரும் இஸ்லாமிய நூலகம் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழை இஸ்லாமிய 120 குடும்பங்களுக்கு காய்கறிகள். மளிகை பொருட்கள் .அடங்கிய தொகுப்புகள் வழங்கும் விழாஅப்பகுதி பெரிய மசூதி பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய நூலகர் ஜனாப் நஸ்ரூல்லாஹ் தலைமை வகித்தார் .மஸ்ஜித் ஜமாலியா மதரஸா கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் முகப்பேர் கவுஸ்பாய் .ஃபரூக்பாய். வழக்கறிஞர் ஷாஜஹான். அஜீஸ்பாஷா.. ஜஃப்ரூல்லாகான் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர் .இதில் இஸ்லாமிய வழக்கப்படி நலிந்தவருக்கு உதவிடவேண்டும் என்று குரானில் கூறியதுபோல் ஏழை குடும்பத்தினருக்கு  வழங்கப்பட்டது எனவும், இதில் முஸ்லிம் நகர் ஜமாத் காரர்கள். தலைவர் மாபூபாஷா .செயலாளர் பஷீர்கான் .அம்ஜத் கான். உள்ளிட்ட திரளான கிராம மக்கள் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here