ராசிபுரம், ஏப். 09 –  

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை கால வெப்பம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே 100 டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து, தமிழக முதல்வரும், தி.மு.க, தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக மக்களை இக்கோடை கால வெப்பத்திலிருந்து காக்கும் வகையில் தி.மு.க. சார்பில், தமிழகத்தில் உள்ள மாநகர, நகர, பகுதி, பேரூர், வட்டம் மற்றும் கிராமங்கள் என அனைத்து இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களான தெருமுனை சந்திப்புகளிலும், சாலை மற்றும் தெருக்கள் ஓரமாகவும், போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் யாருக்கும் எவ்வித இடையூறு இல்லாமல் தண்ணீர் பந்தல் அமைத்து, பொதுமக்களின் தாகம் தீர்த்திட வேண்டும் என்றவாறு திமுக., தலைமை அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிட்டப்பட்டது.

இந்த வேண்டுகோளை ஏற்று, ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பஸ் நிறுத்தம் அருகே நகர திமுக சார்பில், அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சரும், ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.மதிவேந்தன் தலைமை வகித்து திறந்துவைத்தார். மேலும், பொதுமக்களுக்கு தண்ணீர், மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார். இந்த விழாவில், முன்னதாக கழக கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக., பொறுப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே ஆர் என் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

விழாவில், ராசிபுரம் நகர மன்ற தலைவர் கவிதாசங்கர், ராசிபுரம் நகர திமுக., செயலாளர் சங்கர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு கழகங்களின் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல், ராசிபுரம் காஞ்சி சூப்பர் மார்க்கெட் அருகே காங்கிரஸ் நகரமன்ற உறுப்பினர் தலைமையில் அமைக்கப்பட்ட தண்ணீர்பந்தலை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக., பொறுப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே ஆர் என் ராஜேஷ்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here