பொன்னேரி, ஏப். 06 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் .ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் .தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் .கல்லூரியின் வளாகத்தினுள் புதிய தார் சாலைகள் அமைத்தும். மீன்வளர்ப்பு பண்ணைகள் அமைத்தும் .மாணவர்களின் கிச்சன் பார்க் என்ற புதுவிதமான முயற்சியில் உரம் தயாரிக்கப்பட்டு பூங்காக்கள் உள்ளிட்டவைகளை ரூபாய் 84 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திருந்தனர்.
இவைகளை பார்வையிட்டு துவக்கி வைக்கும் விழா கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். சுகுமார் தலைமை ஏற்று விழாவை நடத்தினார்.
வண்ண மீன்கள் வளர்ப்பு பகுதிக்கு சென்றவர் மீன் குஞ்சுகளை தண்ணீரில் வளர்க்க விட்டார் .மாணவர்கள் எஞ்சிய கழிவு உணவுகளில் உரம் தயாரித்து புதிய பூங்காக்களை அமைத்திருந்தனர் அதனைப் பார்வையிட்டார். கல்லூரி வளாகத்தினுள் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலைகளில் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்பித்தார். அவருடன் கல்லூரி முதல்வர் முனைவர் ப.அகிலன் உள்ளிட்ட பல்வேறு துறை ஆசிரியர்கள் மற்றும் திரளான மாணவர்கள் உடனிருந்து சிறப்பித்தனர்.