மதுரவாயல், ஏப். 05 –
மதுரவாயல் அருகே லோடு வேன் (TATA ACE)- கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லோடு வேன் ஓட்டுநர் காலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சென்னை மதுரவாயல் அருகே பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை ஜீசஸ் கால்ஸ் அருகே லோடு வேன் மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானது, வானகரம் மேட்டுகுப்பத்தில் உள்ள தனியார் கம்பெனியின் லோடு வேனை (டாடா ஏஸ்) அதன் ஓட்டுநர் பிரகாஷ் வயது 42 என்பவர் கம்பெனியில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஜீசஸ் கால்ஸ் அருகே வரும் போது, முன்னே சென்றுக் கொண்டிருந்த லோடு வேன் கட்டுப்பாட்டை இழந்து காரின் பின்பக்கமா வேகமாக மோதியதியுள்ளது. இதில் லோடு வேன் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது
இந்த விபத்தில் ஓட்டுநர் பிரகாஷ்க்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு வேனில் சிக்கிக் கொண்டார். அப்போது அங்கிருந்த பொது மக்கள் அவரை வேனில் இருந்து வெளியே இழுத்து காப்பாற்றி்னர். மேலும் இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் விபத்தில் காயமடைந்த லோடு வேன் ஓட்டுநரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்பு விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.