கும்பகோணம், ஏப். 02 –
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அருகே பணத் தகராறில் முதியவர் கொலை செய்த ஒருவரை போலீசார் கைது செய்து மேற் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள கோவில் சன்னாபுரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் கணேசன் என்பவர். இவர் அப்பகுதியில் பாத்திரக்கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது மகள் திருமணத்திற்கு கணேசனின் பாத்திரக்கடையில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு 80 ஆயிரத்திற்கு பாத்திரங்கள் கடனாக வாங்கிக் மகளுக்கு சீதனமாக கொடுத்துள்ளார்.
அதில் 20000 பாக்கி இருந்ததால் நேற்று இரவு கணேசன் ராஜேந்திரனை பார்த்து பாத்திரகடை பாக்கியை உடனடியாக கொடு என்று கூறியுள்ளார் எனக்கு கொடுக்க தெரியும் என்று கணேசனிடம் ராஜேந்திரன் பேசியதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் கணேசனை கீழே தள்ளியுள்ளார் மயக்கமடைந்த கணேசனை உடனடியாக திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கணேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலயறிந்த திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கணேசனை கொலை செய்த வழக்கில் ராஜேந்திரனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.