பொன்னேரி, மார்ச். 30 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பொன்னேரி காவல் ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் காத்தவராயன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் அவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களிடையே பல்வேறு விதமான கருத்துக்களை எடுத்துரைத்து கலந்துரையாடல் நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பொன்னேரி காவல் ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ் உரையாற்றும் போது, மாணவர்கள் தீய பழக்கங்களில் ஈடுபடுபவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். ஒழுக்கத்தை கடைப்பிடித்து பள்ளிக்கு வரவேண்டும் .சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வெளியாட்களிடம் தொடர்புக் கொள்ளக் கூடாது. அவர்களின் தொடர்புகளால் மாணவர்கள் கஞ்சா, மது போன்ற போதை பழக்கங்களுக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டு கல்வி கற்கும் வயதில் விரும்ப தகாத தீயப்பழக்கங்களை கற்றுக்கொண்டு தமது நல்வாழ்க்கையை இழக்க நேரிடும் என்றும், அதுப் போன்றே செல்போன்களை தவறான வழிக்கு பயன்படுத்தக் கூடாது. காதல் போன்ற விவகாரங்களில் பள்ளிகல்வி பயிலும் போதே அதில் ஈடுப்பட்டு உயர் படிப்பு மற்றும் உயர்நிலை பணியை பெறுவதற்கான வாய்ப்புகளை இழக்க நேரிடும், அதனால் மாணவர்கள் பள்ளிப்பருவத்தில் முழுமையான கல்வி பயிலுதல், விளையாட்டில் நீங்கள் கவனம் செலுத்துவதின் மூலம் உடல் வலிமை மற்றும் அறிவுத் தெளிர்ச்சி அடைய முடியும், மேலும் இப்பருவத்தில் உங்களுக்குள் உள்ள தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள் என்பதுப் போன்ற தமது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மேற்கோள் காட்டி அவர்களிடம் விழிப்புணர்வு உரையாற்றினார். மேலும் தற்போது சட்டங்கள் கடுமையாக உள்ளதாகவும், அதனால் தவறானப் பாதைகளில் பயணிப்பவர்களுக்கு தண்டனைகள் கிடைக்கும் எனவும் அவர்களிடையே சட்டம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் இவ்வுரையின் போது எச்சரிக்கைப் படுத்தினார்.
மேலும். பஸ் பேருந்து பயணத்தின் போது மாணவர்கள் படிக்கட்டுகளிலும் மேற்கூரைகளில் பயணம் செய்யாதீர்கள், பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களின் அடிப்படை ஒழுக்கமான சிகை அலங்காரம், ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கும் உடன் கல்வி பயிலும் மாணவர்களிடமும் ஒழுக்கத்துடனும் ஒற்றுமையுணர்வோடும் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதுப் போன்ற பல்வேறு விழிப்புணர்வுக் கருத்துக்களை மாணவர்களிடையே எடுத்துரைத்தார். இதில் திரளான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்