இராசிபுரம், மார்ச். 28 –

ராசிபுரம் டிப்போவில் 99 சதவீதம் பேருந்துகள் இயங்காததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மற்றும் வேலைக்குச் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளானர்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பொது போக்குவரத்தினை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பொது வேலை நிறுத்தத்தின் காரணமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை.

ராசிபுரம் டிப்போவில் மொத்தம் உள்ள 78 பேருந்துகளில் 1 (99%) பேருந்து மட்டுமே இயக்கப் படுகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், இலவச பேருந்தை நம்பி இருப்பவர்கள், வேலைக்குச் செல்வோர் பேருந்து நிலையம் மற்றும் நிறுத்தங்களில் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தனியார் பேருந்துகளும் மிகவும் குறைந்த அளவே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பஸ்களில் நெருகடிகளோடும், படிகட்டுகளில் நின்று கொண்டும், தொற்றிக்கொண்டும் ஆபாத்தான பயணத்தை மேற் கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here