இராசிபுரம், மார்ச். 24 –

இராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே பல ஆண்டுகளாக மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர். இதனால் கல்வியை தொடர்ந்து கற்க பள்ளிக்கு வர முடியாத அபாயம் ஏற்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் அருகேயுள்ளது தாண்டா கவுண்டன் பாளையம், இவ்வூரில் அதிக அளவில் விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள், மலைவாழ் மக்கள் என வறுமைக்கோட்டிற்கு கீழ்வுள்ள மக்கள் அதிகம் வசிக்கும் ஊராகும்.

இவ்வூரில்  அரசு ஊராட்சி ஒன்றிய நிடுநிலைப் பள்ளி உள்ளது அதில்  1-ம் வகுப்பு முதல் 8 -ம் வரை உள்ள வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மொத்தம் 117 மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இதில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 56 மாணாக்கர்களும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 61 மாணாக்கர்களும் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இப்பள்ளிக்கு தலைமையாசிரியர் உட்பட 6 வகுப்பாசிரியர்கள் உள்ளனர்.

இந்நிலையில் 117 மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி பயில வகுப்பறை இடவசதி இல்லாமையால் தமிழக அரசு கடந்த 2008 ஆம் ஆண்டு இப் பள்ளியில் இருந்து 500 கிலோ மீட்டர் தூரத்தில் புதிய வகுப்பறைக் கட்ட டங்கள் கட்டி அங்கு 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள 61 மாணாக்கர்களை அக்கட்டட வகுப்பறையில் கல்விப்பயில ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு படித்து வருகின்றனர்.

ஆனால் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவுப் பெற்ற நிலையிலும் அங்கு மின்சாரம் உட்பட எந்தவித அடிப்டை வசதிகள் எதுவும் செய்து தரப்படாமல் ஆண், பெண் மற்றும் ஆசிரியர்கள் முதற் கொண்டு உடல் உபாதைகளை கழிக்க தண்ணீர் இல்லாததால் அவர்கள் பழைய பள்ளி கட்டிடத்தை நோக்கி அவசர நிலையில் 500 கி.மீ. தூரம் கடந்து வரவேண்டி உள்ளதாகவும், அதே நேரத்தில் மிக அவசர சூழல் ஏற்படும் நிலையில் திறந்தவெளிகளில் மலம் கழித்து வருவதாகவும், இதனால் பல்வேறு நோய் தொற்று மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதால், மாணவர்கள் படிப்பை தொடர முடியாமல் இடைநிறுத்தம் ஏற்படும் பரிதாப சூழல் ஏற்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதற்கான உடனடித் தீர்வை ஏற்படுத்தி தங்கள் பிள்ளைகளின் கல்வி இடை நிறுத்தம் ஏற்படாமல் தொடர்ந்து கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும், மேலும், ஏற்கனவே தாங்கள் பொருளாதார பின்னடைவில் இருக்கிறோம் மேலும் கல்வி தடைப்படுவதால் பிள்ளகளின் எதிர்காலமும் வீணாகி விடும் என அப்பிள்ளகளின் பெற்றோர்கள் தங்கள் ஆதங்கத்தையும் இயலமையையும் அரசின் கவனத்திற்கு கோரிக்கையாக வலியுறுத்துகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here