22 மாற்றுத் திறனாளிகள் கும்பகோணம் பேரூந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நாளை சென்னையில் கோட்டை முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள செல்ல இருந்த நிலையில் போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
கும்பகோணம், மார்ச். 21 –
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாதம் தோறும் பாதுகாப்பு வழங்கப்படும் உதவி தொகையை உயர்த்தி தர வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு போராட்டத்தின் வாயிலாக அரசுக்கு கவனத்திற்கு கொண்டு சென்றும். உதவித் தொகையை உயர்த்தாமல் அரசு காலதாமதம் செய்து வருகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் பாதுகாப்பு உதவித்தொகை அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்தில் ரூ 3800 தெலுங்கானாவில் ரூ 3016 ஆந்திராவில் ரூ 3100 வழங்குவது போல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிக்கு ரூ 3000 மற்றும் கடும் உடல் ஊனமுற்றோருக்கு ரூ 5000 உதவித்தொகை வழங்க வேண்டுமென்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி நாளை சென்னை கோட்டையில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தமிழகம் முழுவதிலிருந்தும் இன்று பல்வேறு மாவட்டங்களில் ரயில். மற்றும் பேருந்து மூலம் மாற்றுத்திறனாளிகள் செல்லவிருந்த நிலையில், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து 22 மாற்றுத்திறனாளிகள் சென்னை செல்ல இருந்தனர் தகவல் அறிந்த காவல் துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாற்றுத்திறனாளிகளிடம் சுமார் அரை மணி நேரம் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ஆனால் அப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
தொடர்ந்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மாவட்ட துணை தலைவர் சுகுமார் தலைமையில் 22 மாற்றுத்திறனாளிகளும் பேருந்து நிலையத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் பேருந்து நிலையத்தில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டி – சிஐடியு மாவட்ட தலைவர் ஜீவபாரதி.






















