திருப்பனந்தாள், மார்ச். 21 –
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் அடுத்த கருப்பட்டிசேரி மெயின் ரோட்டில் அக்கிராமத்திற்கு சொந்தமான பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கோயில் வளாகத்தில் உள்ள இரண்டு உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது மேலும் ஒரு உண்டியல் மர்ம நபர்கள் எடுத்துச்சென்றனர், மேலும் மாரியம்மன் சிலையில் போடப்பட்டுள்ள 7 கிராம் மதிப்புள்ள தாலி சங்கிலியும் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறை ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருடி சென்ற கோயில் உண்டியல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகிலுள்ள சிசிடிவி கேமரா ஆய்வு செய்தும், தஞ்சையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை கைப்பற்றினார்கள் மேலும் தஞ்சையிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டன.
இக்கொள்ளைக் குறித்து திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் திருடி சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்தும் தேடி வருகின்றனர்.























