கும்மிடிப்பூண்டி, மார்ச். 16 –
கும்மிடிப்பூண்டி அருகே நேற்று நடந்த இருவேறு அரசு விழாக்களில் கலந்துக்கொண்டு பல்வளத்துறை அமைச்சர் சா.மு .நாசர் ரூ.2.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி, தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டம் சுற்று-2 துவக்க விழாவினை தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குடபட்ட கீழ்முதலம்பேடு பகுதியில் தமிழ்நாடு அரசு நோய் பராமரிப்புதுறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு, கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் சுற்று-2 துவக்க விழா நடைபெற்றது.
இதில் ஏராளமான கால்நடைகளுக்கு கோமாரி நோய் தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி போடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், பூண்டி ஒன்றியத்தில் உள்ள சுமார் 600 ஏழை பெண்களுக்கு சுமார் ரூ. 2.4 கோடி மதிப்பீட்டலான தமிழக அரசின் திருமண உதவி தொகை, தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவையும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துக்கொண்டு துவக்கிவைத்து வழங்கினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரைசந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன்,பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.