பெருங்களத்தூர், மார்ச். 14 –
பெருங்களத்தூர் இரயில் நிலையம் அருகில் நடைபெற்று வரும் இரயில்வே மேம்பால பணிகள் தொடர்பாக பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்ககள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, ஒப்பந்ததார ர்களிடம் ஒப்பந்த காலத்திற்குள் பணியை முடித்து தரும்படி அறிவுறுத்தினார்.
நெடுஞ்சாலைத்துறை பெருநகரம் அலகு (இரயில்வே கடவு எண்: 32) தாம்பரம் மற்றும் வண்டலூர் இரயில் நிலையங்களுக்கிடையே இரயில்வே கடவு எண் 32க்கு பதிலாக பெருங்களத்தூர் இரயில் நிலையம் அருகில் மேம்பாலம் கட்டும் பணி இரயில்வே திட்டபணிகள் 2000 – 2001ன் கீழ் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் ரூ.76.00 கோடிக்கு அரசாணை எண். 230/நெடுஞ்சாலை (ம) சிறுதுறைமுகங்கள் (HQ2) துறை/ நாள் 01.12.2010ல் வழங்கப்பட்டது. முதல் திருத்திய நிர்வாக ஒப்புதல் ரூ.206.08 கோடிக்கு அரசாணை எண். 34/ நெடுஞ்சாலை (ம) சிறுதுறைமுகங்கள் (HP2)துறை/ நாள் 07.03.2019ல் வழங்கப்பட்டது. மேலும் இரண்டாவது திருத்திய நிர்வாக ஒப்புதல் ரூ.234.37 கோடிக்கு அரசாணை எண். 152/ நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் (HW1) துறை/ நாள் 01.12.2020ல் வழங்கப்பட்டது.
இம்மேம்பாலப்பணி ஒப்பந்ததாரர் ரெனாட்டஸ் பிராஜட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.155.00 கோடிக்கு 24.10.2019 அன்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்தகாலம் 36 மாதங்கள், ஒப்பந்த உடன்படிக்கையின் படி பணி முடிவுறும் நாள் 23.10.2022. இதுவரை ஒப்பந்தகாரரால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் மதிப்பு ரூ.58.70 கோடி.
செங்கல்பட்டு-சென்னை பாலப்பகுதி
இப்பால பகுதியின் மொத்தமுள்ள 22 ஓடுதளங்களும் அணுகு சாலை தாங்கு சுவர்களும் முடிக்கப்பட்டுள்ளது. அணுகுசாலை பகுதியில் மண் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஓடுதளத்தின் தேய்மான பூச்சு (Wearing Coarse) பணிகள் நடைபெற்று வருகிறது.
சீனிவாசாநகர் பாலபகுதி
இப்பால பகுதியின் மொத்தமுள்ள 12 எண்ணிக்கை ஓடுதளங்களில் 7 ஓடுதளங்கள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 ஓடுதளங்களில், 2 ஓடுதள பணிகள் நடைபெற்றுவருகிறது. மீதமுள்ள 3 ஓடுதள பணிகள் நிலஎடுப்புபகுதியில் உள்ளது. நிலஎடுப்பிற்கு இறுதி தீர்ப்பாணை 08.03.2022 அன்று நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் நிலஎடுப்பு முடிக்கப்பட்டு மீதமுள்ள பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை – செங்கல்பட்டு பாலப்பகுதி
கடைக்கால்கள் மொத்தம் 37 எண்ணிக்கைகளில் 8 எண்ணிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளது. ஓடுதளங்கள் மொத்தம் 36 எண்ணிக்கையில் 7 எண்ணிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் நிலஎடுப்பு முடிக்கப்பட்டும் மற்றும் பீர்க்கங்கரணை ஏரி பகுதியில் நீர்வளத் துறையின், தடையில்லா சான்று கிடைக்கப்பெற்றவுடன் மேற்கொள்ளப்படும்.
கிழக்கு புறவழிச்சாலை பாலப்பகுதி
இப்பாலப் பகுதியின் மொத்தமுள்ள 8 ஓடுதளங்களில் 6 ஓடுதளங்கள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 ஓடுதள பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பாலபகுதியின் அணுகுசாலை மின்சார வாரியத்தின் துணை மின் நிலையம் மற்றும் வனப்பகுதியில் அமையவுள்ளது. துணை மின் நிலையத்தை மாற்றியமைக்க தாம்பரம் மாநகராட்சியின் திறந்த வெளிநிலத்தை கையகப்படுத்தவும் மற்றும் வனத்துறையின் நிலத்தை பெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பணிகளின் தற்போதைய நிலை
கடைக்கால் – மொத்தம் 96 எண்ணிக்கையில்
63 எண்ணிக்கை முடிக்கப்பட்டுள்ளது.
தாங்குதூண்கள் – மொத்தம் 90 எண்ணிக்கையில்
58 எண்ணிக்கை முடிக்கப்பட்டுள்ளது.
ஒடுதளம் – மொத்தம் 82 எண்ணிக்கையில்
42 எண்ணிக்கை முடிக்கப்பட்டுள்ளது.
அணுகுசாலை
தாங்குசுவர்கள் – மொத்தம் 6 எண்ணிக்கையில் 4 எண்ணிக்கை முடிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு 23.10.2022க்குள் முடிக்க வேண்டும். பொது மக்களின் நலன் கருதியும், போக்குவரத்து இடையூறை குறைக்க ஒப்பந்த காலத்தில் பணியினை முடிக்க மாண்புமிகு பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்ககள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஒப்பந்ததாரை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்ககள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கோதண்டராமன், தலைமைப் பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர் சேகர், கோட்டப் பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.























