திருவள்ளூர், மார்ச். 14 –
தமிழக முதல்வரின் ஆணைப்படி திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி. மற்றும் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி அமைப்புக்களுக்கான மறைமுக தலைவர் தேர்தலில் , மீஞ்சூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட ருக்மணிமோகன்ராஜ் மற்றும் பொன்னேரி நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு மருத்துவர் பரிமளம் விஸ்வநாதன் வெற்றி பெற்றார்கள். வெற்றிப்பெற்ற இருவரும் இன்று தங்கள் மன்ற தலைவர் பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் ருக்மணி மோகன்ராஜ் இன்று காலை 9 மணிக்கு மீஞ்சூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் பேரூராட்சி அலுவலகத்திற்கு மேளதாளங்களுடன் சென்று செயல் அலுவலர் வெற்றியரசு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பொன்னேரி நகராட்சி மன்ற தலைவராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற டாக்டர். பரிமளம் விஸ்வநாதனுக்கு பொன்னேரி நகராட்சியில் ஆணையர் தனலட்சுமி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
இநந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக கழக செயலாளர் டி.ஜே.கோவிந்தராஜன் , சீனீஆத்தீம்கனி. முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் க .சுந்தரம். உள்ளிட்ட திரளான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




















