செங்கல்பட்டு, மார்ச். 11 –
செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 23 மற்றும் 16வது வார்டு பகுதிகளில் மழை காலங்களில் மழைநீர் வடிய வழியில்லாமல் பகுதி முழுவதும் சாலை மற்றும் வீடுகளில் மழைநீர் புகுந்து மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதியாக இருந்து வந்த நிலையில், இப்பிரச்சினைக்கு வடிகால் வசதி செய்து தரக்கோரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இக் கோரிக்கையின் அடிப்படையில் 23வதுவார்டு வரதராசனார் தெருவில் 25லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கால்வாய் மற்றும் 25லட்சம் மதிப்பீட்டில் புதிய பைப்லைன் அமைத்தல் மற்றும் 16வது வார்டு அழகேசன் தெரு வரதராசனார் தெரு சந்திப்பிலும் ஜிஎஸ்டி ரோடு அழகேசன்நகர் சந்திப்பிலும் தலா 4லட்சத்து10ஆயிரம் ரூபாய் வீதம் கல்வெட்டு அமைக்கவும் மொத்தம் 77லட்சரூபாய் மதிப்பீட்டிலான பணி துவக்க விழாவை செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் மற்றும் நகர்மன்ற துணைத்தலைவர் அன்புச்செல்வன் முன்னிலையில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.





















