காஞ்சிபுரம் மார்ச். 10 –
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி மாத உத்திர பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆண்டு தோறும் 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா கடந்த 7 ஆம் தேதி துவங்கியது. திருவிழா துவங்கி 7 ஆம் நாள் அதாவது வருகின்ற 14 ஆம் தேதி (மகா ரத உற்சவம்) தேர் வீதி உலா நடைபெறும் அதற்கான பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.
65 அடி உயரத்துடன், 30 அடி அகலத்துடனும் கும்பகோணத்தில் இருந்து வந்த 12 பேர் தேரை புதியதாக கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் தேர் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு சோதனை ஒட்டமும் நடைபெறவுள்ளது.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில் திருவிழா தேரோட்டத்தை பங்கேற்க்க தமிழகத்தில் பல மாவட்டங்கள் மட்டும் இல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வெளி நாட்டில் இருந்தும் வருகை தருவார்கள்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் திருவிழாவில் 15 நாட்கள் திருவிழாவில் காலையிலும் மாலையிலும் பல்வேறு வாகனங்களில் ஏகாம்பரநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.