pic file copy
கும்மிடிப்பூண்டி, மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெத்திக்குப்பம் சாமிரெட்டிகண்டிகை ஐ.ஆர்.டி நகர் பகுதியில் வசித்து வரும் முருகேசன் என்பவரின் மகனும் சரத்குமார் என்பவரின் தந்தையுமான பாலு வயது 55 அவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் தனது மகன் வெகுநாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் பிப் 27 ஆம் தேதியன்று மாலை சுமார் 3 மணியளவில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தீராத வயிற்று வலியின் காரணமாக தூக்கிட்டு கொண்டார்.
என்றும், தூக்கிட்ட நிலையில் இருந்தவரை மீட்டு உடனடியாக கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கு அவரை ப்பரிநோதித்த மருத்துவர் ஏற்கனவே தனது மகன் இறந்து விட்டதாக கூறினார். தற்போது அவரது உடல் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ளதாகவும் தெரிவித்து தனது மகனின் உடலை தங்கள் குல வழக்கப்படி அடக்கம் செய்ய வேண்டியதால் அதனைப் பெற்று தரும்படி அப்புகார் மனுவில் தெரிவித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் கும்மிடிப்பூண்டி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேறகொண்ட சட்டவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.




















