கும்பகோணம், பிப். 26 –

கும்பகோணத்தில் அரசு கவின்கலைக் கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் கோரிக்கை போராட்டத்திற்கு எந்தவித மதிப்பளிப்பும் செய்யாமல் கல்லூரி மற்றும் மாவட்டம் நிர்வாகம் தங்கள் உணர்வுகளை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டை முன் நிறுத்தி இன்றும் தொடர் வகுப்பு புறக்கணிப்பு செய்து கல்லூரி வளாகத்தில் தனது பணிகளை செய்து கொண்டே வகுப்பறை புறக்கணிப்பை தொடர்கின்றனர்.

   தமிழகத்தில் கவின் கலைக் கல்லூரிகள் 2 செயல்படுகிறது 1 சென்னையிலும் மற்றொன்று கும்பகோணத்தில் செயல்பட்டு வருகிறது தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் இந்த கல்லூரியில்  வரை கலை சிற்பக்கலை விசுவல் கம்யூனிகேஷன் என்ற மூன்று பாடப்பிரிவுகளில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரி கட்டப்பட்டு சுமார் 44 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் பிரதான கட்டிடம் வலுவிழந்து ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது இது குறித்து மாணவர்கள் முதல்வர் அருளரசன் இடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால்  நேற்று காரை பெயர்ந்து விழுந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக மாணவ மாணவிகள் அப்பகுதியில் இல்லாததால் காயம் இன்றி தப்பி உள்ளன   தங்கள் மேல் எப்போது விழுமோ என்ற பயத்தில் கல்லூரி வகுப்பறைக்கு செல்வதால் தங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் தங்களது குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் எனவே அரசு கலை பண்பாட்டு துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று நேற்று 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்லூரி வளாகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக இன்றும் முற்றுகைப் போராட்டம் ஈடுபடுவதாக இருந்த மாணவ மாணவிகளை காவல்துறையினர் அச்சுருத்துவதாக மாணாக்கர்கள் குற்றச்சாட்டை எழுப்புகின்றனர்.

   இந்நிலையில், கல்லூரி உள்ளே வகுப்பு புறக்கணிப்பு செய்து தங்கள் பணிகளை மாணாக்கர்கள் செய்து வருகின்றனர். மேலும் இப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியரும் கலை பண்பாட்டு துறை அதிகாரிகளும் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்ட பிறகு மாணவ மாணவியர்கள் வகுப்பறைக்கு செல்வோம் என்று அதுவரை வகுப்பு புறக்கணிப்பு செய்து கல்லூரி வளாகத்தில் தங்கள் பணிகளை செய்வோம் என்று மாணவ மாணவிர்கள் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here