திருவாடனை, பிப். 26 –
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அரசு நேரடி நெல்முதல் நிலையத்தில் தனது 559 நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய அந்நிலையத்தில் பில் கலெக்டராக பணிபுரியும் ராமராஜ் என்பவர் தன்னிடம் ரூ. 23, 450 லஞ்சமாக கேட்டதாகவும், அதனை தர எனக்கு விருப்பம் இல்லையெனவும் அதனால் தன்னிடம் லஞ்சம் கேட்கும் பில் கலெக்டர் ராமராஜ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் படி கடந்த பிப்-23 ஆம் தேதி இராமநாதபுரம் ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சார்பில் அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ராமராஜை பொறிவைத்துப் பிடிக்க நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். அதன் விளைவாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் பில் கலெக்டர் ராமராஜ் விவசாயிடம் ரூ. 23,450 பணத்தைப் லஞ்சமாகப் பெறும் போது கையும் களவுமாக பிடிப்பட்டார். அதனைத்தொடர்ந்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் அவரை கைது செய்து அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.65 ஆயிரம் பணத்தை கைப்பற்றி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



















