சென்னை,பிப்.12 –

அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 தொடர்பாக மாநில அளவிலான வெளியிடப்படும் விளம்பரத்திற்கான அனுமதியை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில்  ஊடகசான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் விண்ணப்பம் செய்து முன் அனுமதிப்பெற்று விளம்பரம் வெளியிட வேண்டும்.

அதுப்போன்று மாவட்ட அளவில் வெளியிடப்படும் விளம்பரத்திற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செயல்படும் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன் அனுமதி பெற்று விளம்பரம் வெளியிடப்பட வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் மாநில அளவில் வெளியிடப்படும் விளம்பரங்களை வெளியிடுவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் விண்ணப்பம் செய்து முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் உத்தேசிக்கப்பட்டுள்ள அவ்விளம்பரத்தின் மாதிரி இரண்டு நகல்களோடு உரிய முறையில் விண்ணப்பம் செய்து அனுமதி பெற்ற பின்னர் மட்டுமே நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் விளம்பரம் செய்ய வேண்டும். என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதுப்போன்று மாவட்ட அளவில் வெளியிடப்படும் விளம்பரத்திற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செயல்படும் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன் அனுமதி பெற்று விளம்பரம் வெளியிட வேண்டும் அவ்வாறு வழங்கப்படும் அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி விளம்பர எண் மற்றும் நாள் ஆகியவை விளம்பரப்பகுதியில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here