உத்திரமேரூர், ஜன. 26 –
தமிழகத்திலேயே, அரசு போக்குரவத்து கழகத்தில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, பஸ் இயக்க காலத்தில், அனைத்து பஸ்களையும் இயக்கியதற்காக உத்திரமேரூர் பணிமனை மேலாளர் கருணாகரனுக்கு, சிறந்த பணிமனை மேலாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டத்தில், ஆறு மண்டலத்தில், 55 பணிமனைகள் உள்ளன. இதில், முறையான பஸ் பராமரிப்பு, தடத்தில் உள்ள அனைத்து பஸ்களையும் இயக்குதல், டீசல் சிக்கனம், அதிக வருவாய் ஈட்டுதல் உள்ளிட்ட பல காரணங்களுக்காக, ஒரு பணிமனையை தேர்வு செய்து, குடியரசு மற்றும் சுதந்திர தின விழாவில், சிறந்த கிளை மேலாளருக்கான பணித்திறன் நற்சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்படுகிறது.
அதன்படி, தமிழகத்திலேயே, அரசு போக்குரவத்து கழகத்தில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, பஸ் இயக்க காலத்தில், அனைத்து பஸ்களையும் இயக்கியதற்காக உத்திரமேரூர் பணிமனைக்கு நேற்று பணித்திறன் நற்சான்றிழ் மற்றும் விருது வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் வி.அர்ஜூணன், உத்திரமேரூர் பணிமனை கிளை மேலாளர் எம்.கருணாகரனுக்கு, சிறந்த பணிமனை கிளை மேலாளருக்கான விருது மற்றும் பணித்திறன் நற்சான்றிதழை வழங்கி பாரட்டினார்.
உத்திரமேரூர் பணிமனைக்கு, கடந்த 2019, லோக்சபா தேர்தலன்று, தமிழகத்திலேயே, 130 சதவீதம் அரசு பஸ்களை இயக்கியதற்காக முதன்முறையாக விருது வழங்கப்பட்டது.
அதே ஆண்டு, தொடர்ந்து, 365 நாட்களும் அனைத்து பஸ்களையும் இயக்கியதற்காக இரண்டாது முறையாக வழங்கப்பட்டது.
கடந்த 2020ல், கொரோனா ஊரடங்குக்குபின், எந்த பணிமனையிலும் இல்லாத வகையில், 111 சதவீத அரசு பஸ்களை இயக்கியதற்காக மூன்றாவது முறையாக விருது வழங்கப்பட்டது.
கடந்த, 2021ல்,, டீசல் சிக்கனம், பஸ் டயர்களின் ஆயுள் நீட்டிப்பு, கடந்த சட்டசபை தேர்தலன்று, பணினையில் உள்ள ஊழியர்கள் 100 சதவீதம் ஓட்டுபோட்டதோடு, 135.8 சதவீதம் பஸ்களை இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக நான்காவது முறையாக வழங்கப்பட்டது.
தற்போது, தமிழகத்திலேயே, அரசு போக்குரவத்து கழகத்தில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, பஸ் இயக்க காலத்தில், அனைத்து பஸ்களையும் இயக்கியதற்காக ஐந்தாவது முறையாக விருது வழங்கப்பட்டுள்ளது.





















